முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் குறைந்தது..!

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சுவிஸ், ஜூன், 27 - சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம், சுமார் ரூ 9,000 கோடியாக (1.42 பில்லியன் சுவிஸ் பிராங்குகள்) குறைந்து விட்டது. இது அந்நாடு நிதித்துறை வரலாற்றில் மிகச் குறைந்த அளவாகக் கருதப்படுகிறது. 

சுவிச்சர்லாந்து வங்கி அமைப்பின் புகழ்பெற்ற இரகசிய சுவற்றிற்கு எதிராக உலகலாவிய கடுமையான நடவடிக்கை காரணமாக சுவிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதால் முதலீட்டு அளவு குறைந்து விட்டது என நிதித் துறை விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சுவிஸ் தேசிய வங்கி (எஸ்என்பி, ஸுரிச்) நேற்று வெளியிட்ட அறிக்கையில், 

சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி 2012 ம் ஆண்டு இறுதியில், இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நேரிடையாக சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள பணம் 1.34 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் ஆகும், மேலும் இதைத் தவிர்த்து செல்வம் மேலாளர்கள் மூலம் சுமார் 77 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் முதலீடு செய்யப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகள் மீதான எஸ்என்பியின் ஆண்டு அறிக்கையின் ஒரு பகுதியான உத்தியோகபூர்வ தரவு, 2012 ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் சுமார் 35 சதவீதம் அதாவது ரூ 4,900 கோடியாக குறைந்து விட்டது என சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் இதில் சுவிஸ் வங்கிகளில் உள்ள உலகளாவிய முதலீடுகள் 2012 இறுதியில் 1.4 டிரில்லியன் சுவிஸ் பிராங்குகளாக ( 1.5 டிரில்லியன் டாலர்) அதாவது சுமார் 9.1 சதவீதம் குறைந்து விட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் 2012 ஆரம்பத்தில் இந்தியர்களின் பணம் ரூ 14,000 கோடியாக (2.18 பில்லியன் சுவிஸ் பிராங்குகள்) இருந்த போது உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களின் முதலீடு சுமார் 1.5 டிரில்லியன் சுவிஸ் பிராங்குகளாக ( 1.65 டிரில்லியன்அமெரிக்க டாலர்) இருந்தது. வெளிநாட்டு வாடிக்கையாளர்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வது சம்பந்தமாக அமெரிக்க மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் அழுத்தத்தை சுவிஸ் வங்கிகள் எதிர்கொள்ளும் இந்தத் தருணத்தில் உத்தியோகப்பூர்வ தரவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து வருகின்றனர். இந்த நிதி என்பது சுவிஸ் வங்கிகள் இந்தியா வாடிக்கையாளரிடமிருந்து பெற்ற கடன் என எஸ்என்பியின் உத்தியோகப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் பாதுகாப்பிற்கு புகலிடமான சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருப்புப் பணத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. எஸ்என்பியின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இந்தியர்கள் அல்லது பிற நாட்டவர்கள் மற்றவர்கள் பெயரில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தைப் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்