முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த விமானப் படை வீரர்களுக்கு நிவாரண நிதி: மோடி

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூன். 27 - உத்தரகாண்டில் மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான வீரர்களுக்கு உத்தரகாண்ட் அரசு சார்பிலும், குஜராத் அரசு சார்பிலும் நஷ்ட ்டு அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் பேரழிவில் சிக்கி உயிருக்கு போராடிய இருபது பேரை மீட்டுச் சென்ற விமானப்ப்டை ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 12 உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. 

இந்த சோக சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் விஜய் பகுகுனா மீட்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நஷ்ட ஈ்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், குஜராத் முதலமைச்சர் மோடி, குஜராத் அரசு சார்பில் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாயை நஷ்ட ்ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

உத்தரகாண்டில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணியில் ்ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தந்துள்ள வீரர்களுக்கு தலைவணங்கும் எனது அரசு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் உதவி வழங்கும். மேலும் உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago