Idhayam Matrimony

விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூன்.17 - உத்தரகாண்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் உயிரிழந்த 8 துணை ராணுவத்தினர்  குடும்பங்களுக்கு தலா ரூ.10  லட்சம் நிதி வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 45 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. உத்தரகாண்டில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கேதார்நாத் பகுதியில் 20 பேருடன் ஹெலிகாப்டர் சென்றது. இதில் விமானப் படை அதிகாரிகள், 8 பேரும், மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் 12 பேரும் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் மோசமான சூழ்நிலை காரணமாக விழுந்து நொறுங்கியது. இதையடுத்து மற்ற ஹெலிகாப்டர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் எவரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை  என்று கூறப்படுகிறது.

 ஆனால் 12 சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த 20 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்