முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் மதிப்பை காங்கிரஸ் குறைத்து விட்டது

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.27 - சென்னையில் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளரிடம் கூறியதாவது:- மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் அரசு உறுதிதன்மை இல்லாதாக உள்ளது. எந்த பிரச்சினையினாலும் சரியான முடிவு எடுக்க திணறுகிறது. ஒரு செயல்படாத அரசாகவே உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

நிதி அமைச்சர் ப.சிதம்பரம் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை சொல்கிறார். நாட்டின் வளர்ச்சி குறைந்து கொண்டு போகிறது. உணவு உற்பத்தி தேவைக்கேற்ப இல்லை அண்டை நாடுகளுடன் நல்லுறவுஇல்லை. தீவிரவாதம் வளர்ந்து கொண்டே போகிறது. ஸ்ரீநகரில் 8 ராணுவ வீரர்கள் சொல்லப்படிருகிறார்கள். ஒவ்வொரு பிரச்சினையை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சர்வதேச அளவில் மத்திய காங்கிரஸ் ஆட்சியால் இந்தியாவின் பெருமை கீழே போய்விட்டது.

உத்தரகண்ட் வெள்ள நிவாரணப்பணியை செய்யமோடி சென்றால் அதை எதிர்க்கிறார்கள். நிவாரப்பணியில் கூட அரசியல் பாரபட்சமா? இது என்ன காங்கிரசுக்கு மட்டுமே சொந்தமான நாடா? இது போல் நடந்து சொல்லக்கூடாது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடத்திருக்கிறது. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதை தாங்கள் உள் விவகாரம் என்று சொல்கிறது அதை எப்படி ஏற்க முடியும். மத்திய அரசு உடனே தலையீட்டு குற்றவாளிகள் மீது வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மேற்படி அல்லது அத்வானி இவர் கரீல்யார் பிரதமர் என்று இப்போது பா.ஜ.க. கவலைபடவில்லை சிறந்த ஒருவர் இந்த நாட்டுக்கு பிரதமராக வரவேண்டும் அதை மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு வெங்கையாநாயுடு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்