முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் வேட்டையில் பாகிஸ்தான் ஈடுபடவில்லையாம்

புதன்கிழமை, 4 மே 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,மே.4 - பின்லேடனை பிடிக்க அமெரிக்க ராணுவம் நடத்திய வேட்டையில் பாகிஸ்தான் ராணுவமும், பங்கு பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனை பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 

பின்லேடனை பிடிப்பதற்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடந்த 10 ஆண்டுகளாக ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனால் திங்கட்கிழமை அமெரிக்கபடை நடத்திய தாக்குதலின் போது பாகிஸ்தான் படை எந்த உதவியும் செய்யவில்லை. அமெரிக்காவுடன் சேர்ந்து தாக்குதலிலும் ஈடுபடவில்லை. அதே சமயத்தில் பின்லேடனுக்கு பாகிஸ்தான் எந்த வகையிலும் அடைக்கலம் கொடுக்கவில்லை. அவர் அங்கு தங்கியிருந்தது பாகிஸ்தானுக்கே தெரியாது. 

பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்க பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருப்பது அடிப்படை ஆதாரம் இல்லாதது. யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவது தவறானது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்