முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. தலைவர்களுடன் மோடி சந்திப்பு

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூன்.28 - மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா தலைவர்களை கட்சியின் தேர்தல் பிரசார குழுவின் தலைவரும் குஜராத் மாநில முதல்வருமான நரேந்திரமோடி நேற்று சந்தித்து பேசினார். ஆனால் இந்த சந்திப்பில் நதீன்கட்காரி கலந்துகொள்ளவில்லை. 

லோக்சபை தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டியிருக்கிறது. இதனையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை சந்தித்து பேசி தேர்தல் யுக்தி குறித்து ஆலோசனையை கட்சியின் தேர்தல் பிரசார குழுத்தலைவர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். முதன் முதலாக நேற்று மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் பாரதிய ஜனதா அகில இந்திய பொதுச்செயலாளரும் மாநில பாரதிய ஜனதா தலைவர் பொறுப்பு வகிக்கும் ராஜீவ் பிரதாப் ரூடி, தேசிய செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், பா.ஜ. லோக்சபையின் எதிர்க்கட்சி தலைவர் கோபிநாத் முண்டே, மாநில பா.ஜ. தலைவர் தேவேந்திர பதன்விஸ்,மகாராஷ்டிரா மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எக்நாத் ஹத்சே,வினோத் தவ்தே ஆகியோர்கள் கலந்துகொண்டனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய முன்னாள் தலைவரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவருமான நிதீன்கட்காரி கலந்துகொள்ளவில்லை. 

இந்தசந்திப்பின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியுடன் கூட்டணியை தொடருவது, வரும் லோக்சபை தேர்தலில் கையாள வேண்டிய யுக்தி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சந்திப்புக்கு முன்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜவதேகர், அனைத்து மாநிலங்களிலும் லோக்சபை தேர்தலுக்கு தயாராகுவது குறித்து மோடி விவாதித்து வருகிறார் என்றார். மாநில பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய கமிட்டியில் உள்ள மாநில தலைவர், மாநில துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள்,பொருளாளர்கள், அமைப்பு செயலாளர்கள்,நிதீன்கட்காரி உள்ள அனைத்து முக்கிய தலைவர்களும் ஆலோசனையில் கலந்துகொள்ளுமாறு மோடி அழைப்புவிடுத்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்