முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ வீரரின் மனைவி தீக்குளித்து தற்கொலை

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூன். 28 - காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மனைவி, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த இரு தினங்களுக்கு முன் ஸ்ரீநகர் அருகே நடந்த தீவிரவாத தாக்குதலில் எட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். வீரமரணம் எய்திய அவ்வீரர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு நிவாரணத் தொகை அளித்த போதும், அவர்களின் குடும்பத்தினர் இன்னும் சோகத்திலிருந்து மீளவில்லை. 

அதன் எதிரொலியாக வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரரான ஆதித்யா நந்தியும் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர். பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. 

தாக்குதல் செய்தி கேட்டதும் ஆதித்யாவின் மனைவி பினு நந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். கணவரின் திடீர் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பினு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பினுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago