முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் புதிய அரசு அமைந்தவுடன் பேச்சுவாரத்தை: குர்ஷித்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.29 - பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்தவுடன் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவி ஏற்றிருக்கும் நவாஸ் ஷெரீப், இந்தியாவுடன் உறவை வளர்த்துக்கொள்ள முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதை இந்தியா வரவேற்றுள்ளது. இதுகுறித்து நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சல்மான் குர்ஷித், பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்தவுடன் அந்தநாட்டுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கப்படும் என்றார். இருநாடுகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ஆரம்பத்திலேயே எல்லாம் சரியாக இருக்கிறது நாங்கள் சொன்னால் அது சரியாக இருக்காது. தற்போது நல்ல சூழ்நிலை இருக்கிறது. ன்னும் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை வரட்டும் என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். 

பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்தவுடன் அவர்களுடைய பணியை தொடங்கட்டும். அதன் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கலாம். இருநாடுகளிடையே உள்ள சில பிரச்சினைகளில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இருநாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இதனால் நமக்கு திருப்தி ஏற்படும். அதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஊழியர்கள் மத்தியில் சல்மான் குர்ஷித் பேசினார். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்