இலங்கை ராணுவத்திற்கு அளிக்கும் பயிற்சி தொடரும்

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

கொழும்பு, ஜூன். 30 - இலங்கை ராணுவ வீரர்களுக்கு பாகிஸ்தானில் அளிக்கப்படும் பயிற்சி தொடரும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி பர்வேஷ் கயானி உறுதி அளித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஷ் கயானி, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இலங்கை - பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை தொடர்வது என்றும், இந்த பயிற்சியை மேலும் அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுதவிர, இரு நாடுகள் இடையிலான உயர்கல்வி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த தகவலை இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: