வாடிகன் பண மோசடி: விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவு

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

ரோம், ஜூன். 30 - வாடிகன் வங்கியில் ரூ.4 கோடி வரை பணமோசடியில் ்ஈடுபட்டதாக பாதிரியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை கமிஷன் அமைக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

வாடிகன் நகரில் உள்ள வாடிகன் நிதி அமைப்பு வங்கியில் அக்கவுண்டண்டாக பணிபுரிபவர் பாதிரியார் மோன்சிங்னோர் நுன்சியோ ஸ்காரானோ. வங்கியில் செக் பரிமாற்றத்தின் மூலம் சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் சுருட்டி மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து பாதிரியார் ஸ்காரானோ சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த மோசடி தொடர்பாக இத்தாலி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மோசடி தொடர்பாக பாதிரியார் ஸ்காரானோ உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தை அடுத்து மோசடிகளை தடுக்க விசாரணை கமிஷன் அமைக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டு இருப்பதாக வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. மோசடியில் கைதான இருவரில் ஒருவர் இத்தாலி ரகசிய பிரிவு உறுப்பினர், இன்னொருவர் புரோக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: