முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தாவில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை.1 - கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்தது. மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் ரயில் சேவை பாதித்தது. தெற்கு, வடக்கு, மத்திய கொல்கத்தாவின் பல பகுதிகளில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நின்றதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.  பாலிகுண்டே, சி.ஆர்.அவெனியூ, எம்.ஜி.ரோடு, சகாரியா தெரு, பிதான் சாரனி, கல்லூரிச் சாலை ஆகிய பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாயின. பலத்த மழையால் டம்டம், பதிபுகூர் ஆகிய பகுதிகளும் பாதிப்புக்குள்ளாயின. சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து வெகுவாகக் குறைந்தது.

   கடந்த 24 மணி நேரத்தில் 89.5 மி.மீ. மழை பெய்துள்ளது என்றும்,  மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் சுமாரான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருந்து, தண்ணீரை வெளியேற்றும் பணியில் கொல்கத்தா மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பலத்த மழையால் ஷீல்டா பகுதியில் ரயில் போக்குவரத்து பாதித்தது. தண்ணீர் வெளியேறிய  பிறகு கிழக்கு ரயில்வேயில் ரயில்கள் சீராக இயங்கின. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்