முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும்: உமாபாரதி

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், ஜூலை. 1 - மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சந்தேகம் இல்லாமல் அமோக வெற்றி பெறும் என்று உமா பாரதி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். போபாலில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி மேலும் கூறிய அவர், 

பாரதீய ஜனதா கட்சி ம.பி. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில்தான் இருந்திருக்கிறது. அது ஒரு முக்கிய காரணம் என்றார் உமா பாரதி. காங்கிரஸ் கட்சியால் அரசியல் அதிகாரம் இல்லாமல் நீடிக்கவே முடியாது. அப்படிப்பட்ட கட்சியாக அது மாறி விட்டது என்று குறிப்பிட்ட உமா பாரதி, 10 ஆண்டு காலமாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரசின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக மாறி விட்டது என்றார் உமா பாரதி கிண்டலாக. 

பாரதீய ஜனதா அரசு சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பல அற்புதமான பணிகளை ஆற்றியுள்ளது. இது நிச்சயம் பாரதீய ஜனதாவுக்கு வெற்றியை தேடித் தரும் என்றும் உமா பாரதி குறிப்பிட்டார். தேர்தல் பிரச்சாரம் செய்வீர்களா என்று உமா பாரதியிடம் கேட்ட போது, கட்சி மேலிடம்தான் அது பற்றி முடிவு செய்யும் என்றார் உமா பாரதி. உத்தரபிரதேச மாநிலத்தில் தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது அது பற்றிய முடிவை அப்போதைய கட்சித் தலைவர் நிதின் கட்காரிதான் எடுத்தார் என்று விளக்கினார் உமாபாரதி. 

உ.பி. தேர்தலில் தான் போட்டியிட்ட போது பிரச்சாரத்திற்கு அதிக நேரம் செலவிடவில்லை என்று கூறிய உமா பாரதி, தொண்டர்கள் அதை கவனித்துக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டார். சட்டமன்ற தேர்தலுக்காக மாநில பா.ஜ கட்சி பல கமிட்டிகளை அமைத்துள்ளது. ஆனால் அதில் நீங்கள் எதிலுமே உறுப்பினராக நியமிக்கப்படவில்லையே? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த உமா பாரதி, அது பற்றி கவலை இல்லை என்று கூறினார். மேலும் மற்றவர்கள் எடுக்கும் முடிவு பற்றி தான் கவலைப்படுவதில்லை என்றும் உமா பாரதி விளக்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்