முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் பேரழிவுக்கு அரசு அதிகாரிகளே காரணம்..!

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூலை. 1 - அடுத்த 72 மணி நேரத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பயங்கர மழை பெய்யப் போகிறது என்றும், அதற்குள் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுங்கள். புனித யாத்திரையை தள்ளிப் போடுங்கள் என்று வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் வழக்கமான வானிலை அறிக்கைதான் என்று அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே உத்தரகாண்ட் மாநில பேரழிவுக்கு காரணம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 15 ம் தேதி கனமழை பெய்தது. அடுத்தடுத்த நாட்கள் மேகங்கள் வெடித்து பேய்மழை கொட்டியது. இதில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சாலைகளும், தகவல் தொடர்பு சாதனங்களும் துண்டிக்கப்பட்டன. ஆங்காங்கே புனித யாத்திரை சென்ற பக்தர்களையும், உள்ளூர் மக்களையும் ஆயிரக்கணக்கில் வெள்ளம் சுருட்டி சென்றது. பல கட்டிடங்கள் தரைமட்டமாகி வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன. இவ்வளவு பேரழிவு நடப்பதற்கு முன்பே 14 ம் தேதி உத்தரகாண்ட் வானிலை மையம் கடுமையாக எச்சரித்துள்ளது. 

ஒருமுறையோடு நிறுத்தாமல் தொடர்ந்து எச்சரிக்கை தகவல் அனுப்பி கொண்டே இருந்தது. 

அடுத்த 72 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுங்கள். அத்துடன் சார்தாம் எனும் புனித யாத்திரையை தள்ளிப் போடுங்கள் என்று ஆய்வு மையம் எச்சரித்தது. உத்தரகாண்ட் தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர்கள், இயற்கை பேரிடர் மேலாண்மைதுறை, இந்தோ, திபெத் எல்லை பாதுகாப்பு படை, சார்தாம் யாத்திரை உயரதிகாரிகள் என பல துறையினருக்கும் வானிலை மையம் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. ஆனால் எந்த துறையினரும் இதனை ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். 

வானிலை மையத்தின் எச்சரிக்கையை சீரியசாக எடுத்துக் கொண்டு அதிகாரிகள் செயல்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். பேரழிவில் இருந்து மாநிலத்தை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும் மாநில அரசு அதிகாரிகளை மட்டுமின்றி டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய தலைமையகத்திற்கும் உத்தரகாண்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. அந்த தகவலையும் மத்திய வானிலை மையம் கண்டுகொள்ளவில்லை. மாநிலத்தில் இருந்து எச்சரிக்கை வந்தவுடன் அவர்கள் மத்திய, மாநில அரசுகளை அலர்ட் செய்து இருக்க வேண்டும். ஒட்டுமொத்த அதிகாரிகளும் வழக்கமான வானிலை அறிக்கை என்று மெத்தனமாக இருந்ததால் தடுக்கப்பட வேண்டிய பேரழிவு நடந்திருக்காது. இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர். எத்தனை பேரை காணவில்லை என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அரசு சொல்லும் கணக்கு சரியில்லை என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்