முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலங்குகள் மீது காஸ்மெடிக் சோதனை செய்ய தடை

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை. 1 - அழகு சாதனப்பொருட்களை விலங்குகளின் மீது பரிசோதித்து சோதனை செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இந்தியா. புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளோ அல்லது அழகு சாதனப் பொருட்களோ முதலில் விலங்குகளை வைத்ஹ்டு பரிசோதனை செய்யப்படுவது தான் வழக்கம். நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் இம்முறைக்கு மிருகங்கள் வதை தடுப்பு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், தற்கு தடை விதிக்கக் கோரி போராடியும் வருகின்றனர். இந்நிலையில் இந்திய மதிப்பீட்டு செயலகம் அழகுசாதனப் பொருட்களைப் பரிசோதிக்க விலங்குகளை உபயோகிப்பதைத் தடை செய்து நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அதற்குப் பதிலாக நவீன செயற்கை முறைப் பரிசோதனைகளையும் அது கட்டாயமாக்கியுள்ளது. 

இந்த உத்தரவு அறிக்கையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் மேலாளர் டாக்டர் ஜி.என். சிங் வெளியிட்டுள்ளார். அரசின் இந்த உத்தரவை, மிருகங்கள் வதை தடுப்புக் குழுவின் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். இதற்காக முழு முயற்சி மேற்கொண்ட தனது முழு ஒத்துழைப்பையும் அளித்த மேனகா காந்திக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவின் மூலம் தெற்கு ஆசிய நாடுகளிலேயே இத்தகைய சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்