முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னரை டிஸ்மிஸ் செய்யக்கோரி நடைபயணம் - மா.கம்யூனிஸ்டு

புதன்கிழமை, 4 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மே.4 - கவர்னர் இக்பால்சிங்கை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபயணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில குழு உறுப்பினர் முருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை கவர்னர் இக்பால்சிங் ஹவாலா மோசடியில் ஈடுபட்ட குதிரை பண்ணை அதிபர் அசன் அலிக்கு பாஸ்போர்ட்டு வழங்க சிபாரிசு செய்தார். இது தொடர்பாக அமலாக்கப்பிரிவினர் 3 முறை அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி அசன் அலிக்கு 3 பாஸ்போர்ட்டுகள் வழங்க கவர்னர் இக்பால்சிங் சிபாரிசு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் கவர்னர் தானாகவே பதவி விலகி இருக்க வேண்டும். அவரது மகன்கள் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு தமது அதிகாரத்தை பயன்படுத்தி மருத்துவக்கல்லூரி பெற அவர் முயற்சி செய்தார். இந்த மருத்துவக்கல்லூரியின் தடையில்லா சான்றிதழுக்காக தலைமை செயலாளர் விதிமுறைகலை மாற்றியுள்ளார். 

அவர்களுக்கு புதுவை முதல்வர் வைத்திலிங்கம் வக்காலத்து வாங்கி வருகிறார். எனவே இந்த முறைகேடுளில் ஈடுபட்ட கவர்னர் இக்பால்சிங்கை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையெனில் கவர்னரையும், தலைமை செயலாளரையும் கைது செய்ய வேண்டும். கவர்னர் இக்பால்சிங்கை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி வருகிற 7, 9, 10 தேதிகளில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 3 நாள் நடைபயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நடைபயணம் புதுவை நகர், கிராம பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கறுப்புக் கொடியுடன் நடைபெறும். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் கலந்து கொள்வார்கள். 

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின் போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெருமாள் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்