இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை, ஜூலை.2 - கிணற்றில் தவறிவிழுந்த கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அக்கரடி தாக்கியதில் படுகாயமடைந்த இரண்டு வனக்காப்பாளர்களுக்கு, அவர்களின் தன்னலம் கருதாத முயற்சிக்கும், பொது மக்களை காக்க கடமை உணர்வுடன் போராடியமைக்காகவும் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், கனமூர் வனப் பகுதி, பள்ளக்குழி கிராமம் அருகே 30.6.2013 அன்று கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் முயற்சியில் ்டுபட்ட போது வனக் காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகியோர் கரடியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
சம்பவ தினத்தன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடியை வலையில் கட்டி மீட்டு வெளியில் கொண்டு வந்த போது, வலையிலிருந்து விடுபட்டு அருகில் நின்றிருந்த பொது மக்களைத் தாக்க முற்பட்ட கரடியினை வனக் காப்பாளர் ரஹமத்துல்லா தைரியத்துடன் தடுக்க முயன்றுள்ளார். அப்போது, கரடி அவரது தலையிலும், முகத்திலும் தாக்கியதில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
ரஹமத்துல்லாவை கரடியிடமிருந்து மீட்க முற்பட்ட போது, வனக் காப்பாளர் ரமேஷ்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. கரடி துரத்தியதில் அருகிலிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் அவரது வயிற்றில் அடிப்பட்டுள்ளது.
வனக் காப்பளர் ரஹமத்துல்லா சமயோசிதமாக யாருடைய உந்துதலும் இன்றி, தனது உயிரையும் துச்சமென மதித்து, கரடியுடன் போராடி பொது மக்களைக் காப்பாற்ற மேற்கொண்ட துணிச்சலான செயல்பாட்டிற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்வில்,
ரஹமத்துல்லாவுக்கு உதவிய வனக்காப்பாளர் ரமேஷையும் நான் பாராட்டுகிறேன்.
வனக் காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீரச் செயலையும், தன்னலம் கருதாத சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இந்நிகழ்வில் காயமடைந்த வனக் காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் சிறந்த மருத்துவமனையில் அனுமதித்து அரசு செலவில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் நான் கிருஷ்ணகிரி மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். தேவைப்படின், சென்னையிலுள்ள மிகச் சிறந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் இவர்களுக்கான முழு மருத்துவ செலவினை அரசு ஏற்றுக்கொள்ளவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 5 days 4 min ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் சுகாதார அமைச்சர் பலி : வெறிச்செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை
29 Jan 2023புவனேஸ்வர் : ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்ச
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
யு-19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை
29 Jan 2023ஜொகனர்ஸ்பெர்க் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் நாளை துவங்குகிறது : வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி
29 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்செய்யும் பணி நாளை தொடங்குகிறது.
-
ஆஸ்திரேலிய ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன்
29 Jan 2023சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
29 Jan 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது : பிப்ரவரி 7-ம் தேதி தேரோட்டம்
29 Jan 2023பழனி : முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-30-01-2023
30 Jan 2023 -
ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
29 Jan 2023பெர்த் : ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
-
கன்னட பட காமெடி நடிகர் மாரடைப்பால் காலமானார்
29 Jan 2023பெங்களூரு : கன்னடத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் மன்தீப் ராய் மாரடைப்பால் காலமானார்.
-
ஆஸ்திரேலிய ஓபன் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
29 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ஜோகோவிச்.
-
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி வருகிற 12 -ம் தேதி துவங்குகிறது
29 Jan 2023சென்னை : சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி வருகிற 12 -ம் தேதி துவங்குகிறது. இதில் 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு
29 Jan 2023சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
29 Jan 2023புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
-
அண்ணா நினைவு நாள்: வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
29 Jan 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்படுகிறது.
-
ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் : ம.பி. முதல்வர் அறிவிப்பு
29 Jan 2023போபால் : பொருளாதார ரீதியில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்
-
சேலத்தில் எடப்பாடியுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை : அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என பேட்டி
29 Jan 2023சேலம் : சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
-
இதுவரை 220.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன : மத்திய அரசு தகவல்
29 Jan 2023புதுடெல்லி : நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள
-
வினாத்தாள் கசிவு: குஜராத்தில் அரசு தேர்வு ஒத்திவைப்பு
29 Jan 2023காந்திநகர் : குஜராத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் ஆள்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி
29 Jan 2023புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.