முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பழிப்பு வழக்குகளில் டெல்லி முன்னணி

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.2 - டெல்லி மாநகரில் 806 கற்பழிப்பு வழக்குகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி வரை பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு டெல்லியில் 330 கற்பழிப்பு வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.  ஆனால் இந்த ஆண்டு கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன.

டெல்லி கிழக்கு மாவட்டத்தில் 122 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுபோல் டெல்லி தென்கிழக்கு மாவட்டத்தில் 106 வழக்குகளும், தென் மேற்கு மாவட்டத்தில் 102 வழக்குகளும் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு இந்த 3 மாவட்டங்களிலும் முறையே 45,56, 42  வழக்குகளே பதிவாகி இருந்தன.

டெல்லியில் மட்டும் இந்த அளவு கற்பழிப்புக் குற்றகள் ஏன் அதிகரித்துள்ளன என்று கேட்டபோது, சட்ட ஒழுங்கு போலீஸ் கமிஷனர் தீபக் மிஸ்ரா கூறியதாவது: 

பெண்கள் மீது கொடுமைகள் நடத்தப்பட்டால் அதை போலீஸார் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். பெண்களுக்கு எதிராக கொடுமைகள் இழைக்கப்பட்டால் தயவு தாட்சண்யம் இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு எல்லா காவல் நிலைய அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பெண்களும் தயங்காமல் போலீஸாரிடம் புகார் கொடுக்க முன் வருகின்றனர். 

இதன் மூலம் 95 சதவீத வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என்றும் மிஸ்ரா கூறினார். 

பெண்களை கேலி, கிண்டல் செய்ததாக கடந்த ஆண்டு 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு இது 1780 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு டெல்லியில் 230 வழக்குகளும், மேற்கு டெல்லியில் 209 வழக்குகளும், கிழக்கு டெல்லியில் 200 வழக்குகளும் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் முறையே 20, 25, 35 வழக்குகள் மட்டும் பதிவாகி இருந்தன. 

டெல்லி மாநகரம் கற்பழிப்பில் முன்னணியில் உள்ளது என்பது டெல்லி போலீஸார் தரும் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்