முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை - கடாபி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ,பிப்.23 - லிபியா அதிபர் கடாபி நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தொலைக்காட்சியில் தோன்றி அதை மறுத்திருக்கிறார் கடாபி. அது மட்டுமல்ல, வெளிநாட்டு செய்தி தொலைக்காட்சிகளை நாய்கள் என்றும் அவர் வர்ணித்திருக்கிறார். எகிப்தில் அந்நாட்டு அதிபர் முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் பலர் பலியானார்கள். இருப்பினும் மக்களுக்கே அதில் வெற்றியும் கிடைத்தது. எகிப்து அதிபர் முபாரக் நாட்டை விட்டே ஓடினார். இந்த புரட்சியை அடுத்து பல அரபு நாடுகளிலும் தற்போது மக்கள் புரட்சி எழுந்துள்ளது. லிபியா, ஏமன் போன்ற நாடுகளிலும் ஜனநாயகத்திற்காக மக்கள் போராட தொடங்கி விட்டனர். இந்த நிலையில் லிபியா அதிபர் கடாபி நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக செய்திகள் வெளியாகின. 

ஆனால் அரசு தொலைக்காட்சியில் தோன்றி அதை மறுத்திருக்கிறார் கடாபி. வெளிநாட்டு செய்தி தொலைக்காட்சிகளை நாய்கள் என்றும் அவர் திட்டித் தீர்த்தார். நான் திரிபோலியில்தான் இருக்கிறேன். வெனிசுலாவில் இல்லை. எனவே இந்த சேனல்களை நம்பாதீர்கள். அவர்கள் நாய்கள் என்று கடாபி ஆவேசமாக கூறினார். 41 ஆண்டுகளாக இவரது ஆட்சி அங்கு நடந்து வருகிறது. இதை எதிர்த்துத்தான் அங்கு மக்கள் போராடி வருகிறார்கள். கடாபிக்கு தற்போது வயது 68. 

நாட்டை விட்டு ஓடவில்லை என்று இவர் மறுத்தாலும் லிபியாவில் மக்கள் புரட்சி கடுமையாக வெடித்துள்ளது. 8 வது நாளாக நடந்த இந்த போராட்டத்தில் இதுவரை 300 பேர் பலியாகி விட்டார்கள்.  இதனிடையே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் லிபியாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைதியாக போராடும் மக்கள் மீது ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரத்தக் களரியை நிறுத்துங்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது லிபியா அரசின் பொறுப்பு என்று ஹிலாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்