முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியிலிருந்து திரும்பும் தமிழர்களுக்கு வேலை வழங்க கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 - சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத சவுதி அரேபியாவில் நிதாகத் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் பெயரால் அந்த நாட்டில் பணியாற்றி வந்த வெளிநாட்டினரையெல்லாம் திரும்ப அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் காரணமாக 60 ஆயிரம் இந்தியர்கள் அந்த நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்படவிருப்பதைப் பற்றியும், அந்த 60 ஆயிரம் இந்தியர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்பது பற்றியும் அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்றும் கடந்த வாரம் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால் வேறு வழியின்றி சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இந்தியர்களை அங்கிருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிடும் வேலையில் இந்தியத் துதரகம் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்தியர்களுக்கு ஏற்கனவே இந்தியத் தூதரகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு திரும்பி வரும் தமிழர்களை வரவேற்று, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அளித்திடும் வகையில் உடனடியாகத் தேவையான நிதி உதவி, கடன் உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்து அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டுமென்றும், அவர்களுக்குத் தமிழகத்திலேயே நிரந்தரப் பணி வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony