7-வது நாளாக வேலை நிறுத்தம் - 24 விமானங்கள் ரத்து

புதன்கிழமை, 4 மே 2011      தமிழகம்
Air india

 

சென்னை, மே.4 - ஏர் இந்தியா விமானிகள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 7-வது நாளாக அவர்களது வேலை நிறுத்தம் நீடித்தது.இதையடுத்து சென்னையில் இருந்து புறப்படும் சிங்கப்பூர், இலங்கை உள்பட 5 வெளிநாட்டு விமானங்களும், மும்பை, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி உள்பட 19 உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எனினும் சென்னையில் இருந்து டெல்லிக்கும், விசாகபட்டினத்திற்கும் 2 விமானங்கள் இயக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்: