உத்தரகண்டில் 11,000 பேர் மாயம் என்கிறது ஐ.நா.

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன், ஜூலை. 3 - உத்தரகண்டில் மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11,000 பேர் மாயமாகியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சீர் குலைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் 4 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 70 முதல் 130 மிமீ மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த மழையின் அளவோடு ஒப்பிடுகையில் இது குறைவு தான் என்றாலும் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் உத்தரகண்டில் மாயமானவர்களின் எண்ணிக்கை 11,000 என்று ஐ.நா. ஏஜென்சி கணக்கிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பத்ரிநாத்தில் இருந்து 1,350 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் 3,500 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. 3,500 முதல் 3,700 பேரைக் காணவில்லை என்று புகார்கள் உள்ள நிலையில் 11,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஐ.நா. ஏஜென்சி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 2,000 ல் இருந்து 4,000 ஆக உயர்ந்துள்ளது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: