முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படிப்புக்கு ஏற்ற வேலை - இசையமைப்பாளர் செளந்தர்யன் வேண்டுகோள்

புதன்கிழமை, 4 மே 2011      சினிமா
Image Unavailable

 

மயிலாடுதுறை. மே.4 - தமிழ்நாட்டில் இலவச திட்டங்களை தவிர்த்து விட்டுபடிப்புக்கு ஏற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு தரவேண்டும் என்று பிரபல சினிமா பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான செளந்தர்யன் கூறினார். மயிலாடுதுறைக்கு வருகை தந்த பாடலாசிரியரும் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான செளந்தர்யன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகர் வடிவேல் சினிமா துறையில் சிறந்து விளங்கி வருகிறார். தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் நல்ல நண்பர் இருவருக்கும் ஏற்பட்ட ஏதோ ஒரு பகையினால் நடிகர் வடிவேல் விஜயகாந்தை பழிதீர்க்க அரசியல் மேடையில் ஏறியது சினிமா கலைஞர்களுக்கு வருத்தத்தை தருவதாக உள்ளது. அரசியலில் இறங்கிய வடிவேல் காமெடி இனி எடுபடுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவர்கள் இருவரும் என்றாது ஒருநாள் நண்பர்கள் ஆவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எவ்வளவு கோடி பணம் கொட்டி எடுத்தாலும் நல்ல கதை அம்சத்தையும், கருத்தான பாடலையும் கொடுத்தால்தான் படங்கள் ஓடும். இதற்கு எடுத்துக்காட்டு கலவாணி, நாடோடி, சுப்பிரமணியபுரம் ஆகிய படங்களை கூறலாம்.

தற்போது வர இருக்கும் தேசிய நெடுஞ்சாலை, படைத்தலைவன் போன்ற படங்களுக்கு பாடல் எழுதி இசையமைத்து வருகிறேன். இன்றைய அரசியல்வாதிகள் போட்டிப்போட்டுக்கொண்டு இலவச திட்டங்களை அறிவித்துக்கொண்டு மக்களை சோம்பேரியாக்கி விடுகிறார்கள். அவரவர் படிப்புக்கு ஏற்ற வலைவாய்ப்பு தரவேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் உயர்வு ஏற்படும். தமிழகத்தில் 80 சதவீதம் வாக்கு பதிவாகி இருப்பது தீயவையை ஓட்டு என்ற எண்ணத்தோடு ஓட்டு போட்டுள்ளனர். இன்றைய தேர்தல் அதிகாரிகள் போல் தொடர்ந்து இருக்க வேண்டும். மக்கள் காசுக்கு அடிமையானால் நம்மை சுரண்டி சாப்பிட்டு விடுவார்கள்.  எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கல்வி வியாபாரமாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த ராஜாஜி குலகல்வி என்றார். ஆனால் மறைந்த காமராஜர் அனைவருக்கும் கல்வி என்று கிராமந்தோறும் கல்வி திட்டத்தை கொண்டு வந்து இலவச உணவையும் வழங்கினார். காமராஜர் போன்ற உணர்வு அவரை நினைத்து  செயல்பட வேண்டும். தேர்தலில் மக்கள் வாக்கு தீயவர்களை ஒழித்து நல்லர்களை தேர்ந்தெடுக்க வாக்களித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்