இந்திய தூதரக அலுவலகத்தை உளவு பார்த்த அமெரிக்கா..!

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 3 - அமெரிக்க உளவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர் எட்வர்டு ஸ்நோடன். இவர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு வெளிநாடுகளின் தூதரக அலுவலகங்களை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டினார். எனவே அவரை கைது செய்ய அமெரிக்கா முயன்றது. அதை தொடர்ந்து ஆவணங்களை பதிவு செய்த லேப்டாப்புடன் ஹாங்காங் தப்பிச் சென்றார். அங்கிருந்த ரஷ்யா சென்ற அவர் ஈக்குவடார் நாட்டில் தஞ்சமடைய அடைக்கலம் கேட்டுள்ளார். தற்போது அவர் எங்கிருக்கிறார் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையை லண்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் என்ற பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திலும் உளவு பார்க்கப்பட்டது என ஸ்நோடன் வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரான்சு, இத்தாலி, ஐரோப்பிய யூனியன் தூதரகம், கிரேக்க நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, துருக்கி உள்ளிட்ட 38 நாடுகளின் தூதரகங்களும் உளவு பார்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இங்கு நடைபெற்ற உளவுப் பணிக்கு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, உள்ளே இருப்பவர்களின் டெலிபோன் அழைப்புகளை ஒட்டுக் கேட்க நவீன ஆண்டெனா கருவிகளும், ஒட்டுக் கேட்பு கருவிகளும் ரகசியமாக பொருத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய யூனியன் தூதரகத்தில் உள்ள பேக்ஸ் கருவியில் டிராப் மையர் என்ற ரகசிய உளவு கருவி பொருத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தூதரக அலுவலகங்களில் ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: