முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

புதன்கிழமை, 3 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

லாம்பஹன், ஜூலை. 4 - இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50 பேர் காயமடைந்தனர். இந்தோனேசியாவின் வட மேற்கு மாகாணத்தில் ஏஸ் என்ற நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.1 அலகுகளாக பதிவானது. பிரேன் என்ற நகருக்கு தெற்கே 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்க மையம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று லாம்பஹன் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் எமாசூர்யானி தெரிவித்தார். அதே சமயம் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. பாண்டா ஏஸ் நகரத்தில் கட்டிடங்கள் ஒரு நிமிடம் வரை அதிர்ந்ததாக நேரில் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்