இங்கிலாந்து ஓட்டல் ஊழியரிடம் பாக். மசாஜ்காரர் கைவரிசை

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஜூலை. 5 - லண்டன் ஓட்டலைச் சேர்ந்த பெண் ஊழியரிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மசாஜ் செய்து விடும் பணியில் ்ஈடுபட்டிருந்த மலங் அலி. தற்போது அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது. 

இந்த மலங் அலி, ஏற்கனவே பாகிஸ்தான் வீரர் ஒருவரின் அறைக்குள் புகுந்து பணம் உள்ளிட்டவற்றை திருடியதாக சர்ச்சைக்குள்ளானவர் என்பது நினைவிருக்கலாம். சமீபத்தில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்தன. அதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியில், மசாஜ் செய்யும் வேலைக்காக நியமிக்கப்பட்டிருந்தவர் மலங் அலி. பாகிஸ்தான் அணியினர் தங்கியிருந்த ஓட்டலில்தான் இவரும் தங்கியிருந்தார். 

அப்போது ஓட்டல் பெண் ஊழியர் ஒருவரிடம் மலங் அலி பாலியல் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை வெடித்தது. அந்தப் பெண் ஊழியர், ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார். ஓட்டல் நிர்வாகம் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை அழைத்து முறையிட்டது. இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட்வாரியத்தின் காதுகளை எட்டியது.ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்து.. இது குறித்து டென்ஷனான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மனைவிக்கு உடம்பு சரியில்ல என்று காரணம் சொல்லி விட்டு பாகிஸ்தான் திரும்புமாறு மலங் அலிக்கு கட்டளையிட்டது. 

அதன்படி சொல்லி விட்டு அவரும் திரும்பிப் போனார். வந்தவரை விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தவறுநடந்திருப்பத உறுதி செய்து கொண்டது. பின்னர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. முன்னதாக மலேசியாவில் நடந்த உலக இளையோர் கோப்பை போட்டித் தொடரின்போது பாகிஸ்தான் வீரர் ஒருவரின் அறைக்குள் புகுந்து பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சிக்கியவர் இந்த மலங் அலி. ஆனால் அவரை மறுபடியும் மசாஜ் பணியில் அமர்த்தியது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஆர்வலர்கள் புலம்புகின்றனர். அணியில் உள்ள சில மூத்த வீரர்களின் ஆதரவு மலங் அலிக்கு இருப்பதாகவும், அவர்களால்தான் இவர் தப்பு செய்தாலும் தப்பி விடுவதாக புலம்பல்கள் கேட்கின்றன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: