Idhayam Matrimony

பாக். நம்பகமான கூட்டணி நாடு அல்ல - சிஐஏ விளக்கம்

வியாழக்கிழமை, 5 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,மே.5 - பாகிஸ்தான் நாடானது அமெரிக்காவின் நம்பகமான நாடு அல்ல. அதனால்தான் பின்லேடனை சுட்டுக்கொலை செய்யும் திட்டத்தை முன்கூட்டி பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க எம்.பி.க்களிடம் சி.ஐ.ஏ. அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் பின்லேடன் பாகிஸ்தானில் அமோடாபாத் நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததால் அவனை சுட்டுக்கொலை செய்யும்முன் முறைப்படி பாகிஸ்தான் அரசிடம் சொல்லியிருக்க வேண்டும். அதாவது ஒரு நாட்டில் இன்னொரு நாட்டு விமானம் புகுந்து தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டவிரோதமாகும். ஆனால் பின்லேடன் இருந்த வீட்டை தாக்குவதற்கு முன்பு அதுபற்றி பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்கவில்லை. 

இதுகுறித்து அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிகிறது. அதனால் அவர்களை சி.ஏ.ஐ. அமைப்பின் தலைவர் லியோன் பனட்டா மற்றும் அதிகாரிகள் எம்.பி.க்களை சந்தித்து பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விபரத்தை தெரிவித்தனர். பாகிஸ்தான் நாடானது அமெரிக்காவின் நம்பகமான கூட்டு நாடு அல்ல. அதனால் பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்படுவதற்கு முன்பு அது குறித்து பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்திருந்தால் பின்லேடனுக்கு தெரிவித்திருப்பார்கள். பின்லேடனும் தப்பித்திருப்பான். அமெரிக்க படையின் செயல் அர்த்தமில்லாததாகபோய்விடும். அதனால்தான் பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்கவில்லை என்று எம்.பி.க்கள் சி.ஐ.ஏ. அதிகாரிகள் விளக்கமாக எடுத்துக்கூறினர். இதை அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு எம்.பி. தெரிவித்ததாக பாராளுமன்ற செய்தியை வெளியிடும் தி ஹல் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பின்லேடன் ஒளிந்திருந்த வீட்டை தாக்கும் திட்டத்தை பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிப்பதில்லை என்றும் அப்படி தெரிவித்தால் திட்டமே நாசமாய் போய்விடும் என்றும் பின்லேடன் கொல்லப்பட்ட தினத்தன்று டைம் இதழுக்கு சி.பி.ஐ. தலைவர் லியோன் பனட்டா பேட்டி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்