முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்னோடென்னுக்கு காதல் தூது விட்ட ரஷ்ய உளவாளி

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜூலை. 6 - விளாடிமிர் புதின் தான் ரஷ்யாவின் முதன்மையான எல்லா தகுதிகளும் அமையப் பெற்றப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண் எனப் பத்திரிக்கைகள் புகழ்ந்து கொண்டிருக்க, தற்போது விளம்பர மாடலாக இருக்கும் முன்னாள் ரஷ்ய பெண் உளவாளியின் கண்ணோ ஸ்னோடென் மீது விழுந்துள்ளது. சமீப காலமாக அமெரிக்காவின் பல திரை மறைவு வேலைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் ஸ்னோடென்க்கு தற்போதுவயது 30 ஆகிறது. இவர் அமெரிக்க உளவுப்பிரிவில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஸ்னோடென்க்கு குடும்பஸ்தனாகும் வாய்ப்பு கம்யூட்டர் வழியே வந்து குதித்துள்ளது.

ஸ்னோடென்னுக்கு காதல் தூது விட்ட அந்த அழகியின் பெயர் அன்னா சாப்மேன். இவர் கடந்த 2010 ம் ஆண்டு அமெரிக்காவில் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட 10 ரஷ்ய உளவாளிகளில் ஒருவர். தற்போது 31 வயதாகும் அவர் ரஷ்யாவின் பிரபல விளம்பர மாடலாக உள்ளார். தன்னுடைய கல்யாண ஆசை குறித்து ட்வீட்டரில் இவ்வாறு தூது விட்டுள்ளார் சாப்மேன், ஸ்னோடென், என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டு கூடவே, தனது அழகிய புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார் சாப்மேன். சில மணி நேரக்கள் பதில் வரும் என பொறுத்துப் பார்த்த சாப்மேன், பதில் வராததால், அடுத்த ட்வீட்டை தட்டியுள்ளார். அதில், நாசா, நீ எங்களுக்கு குழந்தைகள் பிறந்த பின்னும் கண்காணிப்பியா? என அமெரிக்காவைக் கிண்டலடித்துள்ளார். ஆனால், சேப்மேனின் இந்தக் காதல் தூதுகளுக்கு இதுவரை ஸ்னோடென்னிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்