முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணா நதிநீர் தமிழகம் வந்து சேர்ந்தது

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.7 - சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் தற்போது 200 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் உள்ளது (கொள்ளளவு 3231). தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 1-ந் தேதி கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. 152 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிருஷ்ணா கால்வாயை கடந்து தமிழக எல்லையான 'ஜீரோ' பாயிண்டுக்கு இன்று மதியம் கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்தது.

எனவே இன்று காலை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்ததும். இதன் பிறகு கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவை அதிகரிக்க இருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போது திறந்து விடப்படும் 500 கனஅடி தண்ணீரை 1000 கனஅடியாக அதிகரிக்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் இன்னும் 10 நாளில் அதிகரிக்க தொடங்கிவிடும். அதன்பிறகு அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டு சென்னை நகரின் குடிநீருக்காக பயன்படுத்தப்படும்.

இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் குறைந்தது 2 மாதம் வரும். இதை பூண்டு ஏரியில் தேக்கி வைத்து, மழை பெய்வதை பொறுத்து உபயோகப்படுத்துவோம்.

தற்போது சென்னையில் 1 நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் நடை பெறுகிறது. 

இந்த நிலைமை விரைவில் சீரடையும் என்று கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony