பாகிஸ்தானில் ரிக்சா மீது ரயில் மோதி 13 பேர் சாவு

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

லாகூர், ஜூலை.7  - பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிள் ரிக்சா மீது ரயில் மோதியதில் ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலிருந்து, 40 கி.மீ. தொலைவில் உள்ள ஷேய்குபுரா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் ரிக்சாவில் 14 பேர் பயணம் செய்துள்ளனர்.

ஆளில்லாத ரயில்வே கேட்டில் இந்த மோட்டார் சைக்கிள் ரிக்சாவை அதன் டிரைவர் ஓட்டிச் சென்றார். திடீரென்று ரிக்சா பழுதாகி நின்றது. அப்போது கராச்சியிலிருந்து, லாகூர் சென்ற ரயில் இந்த மோட்டார் சைக்கிள் ரிக்சா மீது மோதியது. இதில் 13 பேர் இறந்தனர் என்று நிவாரணப் பணியை மேற்கொண்ட ஜாம் சதாத் தெரிவித்தார். 

  இந்த விபத்தில் இதில் பயணம் செய்த 10 பேர் அதே இடத்தில் இறந்தனர். மீதியுள்ள டிரைவர் உள்ளிட்ட மற்றவர்கள் ஷேய்குபுரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் டிரைவர் உள்பட  3 பேர் இறந்தனர். மோட்டார் சைக்கிள் ரிக்சா டிரைவரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் ஜாம் சதாத் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: