அமெரிக்காவில் விமானம் விழுந்ததில் 2 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

சான்பிரான்சிஸ்கோ, ஜூலை.8 - அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கும்போது ஓடு தளத்தில் நொறுங்கி விழுந்து தீபிடித்ததில் இருவர் உயிரிழந்தனர். 182 பேர் பலத்தக் காயமடைந்தனர். விபத்தில் சிக்கிய ஏசியன் ஏர்லயன்ஸ் விமானம் சீயோலிலிருந்து புறப்பட்டபோது, அதில் 16 விமான ஊழியர்கள், 291 பயணிகள் உள்பட   மொத்தம் 307 பேர் பயணம் செய்தனர். இந்த விமான நிலையத்திலிருந்து பல விமானங்கள் வந்து செல்லும். அதிர்ஷ்டவசமாக இதில் பெரும்பாலான பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர். ஆனாலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அனுப்பியள்ள இரங்கல் செய்தியில் சான்பிரான்சிஸ்கோ நகர மேயர் எட்வின் லீ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: