முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் - கொல்கத்தா ரைடர்ஸ் அபார வெற்றி

வியாழக்கிழமை, 5 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், மே. 5 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ரன் வித்தியாசத் தில் டெக்கான் சார்ஜர்சை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னிலை பெற் று உள்ளது. 

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், யூசுப் பதான் அதிர டியாக ஆடி அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினார். கேப் டன் காம்பீர், காலிஸ், மற்றும் எம்.கே.திவாரி ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, இக்பால் அப்துல்லா மற்றும் பாட்டியா இருவரும் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிரட்லீ மற்றும் காலிஸ் இருவரும் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியின் 42 - வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச அரங்கத்தில் நடந்தது. இதில் கேப்டன் சங்கக்கரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும்,கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற டெக்கான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில், மார்க ன் மற்றும் காலிஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

கொல்கத்தா ரைடர்ஸ் அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 169 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 4 வீரர்கள் கால் சதம் அடித்ததால் அந்த அணி கெளரவமான ஸ்கோரை எட்டியது.

கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான யூசுப் பதான் அதிரடியாக ஆடி, 25 பந்தில் 47 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். இவரது ஆட்டத்தால் அந்த அணி வலுவான நிலையை அடைந்தது.  

அடுத்தபடியாக, கேப்டன் காம்பீர் 22 பந்தில் 35 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, காலிஸ் 31 பந்தில் 30 ரன்னையும், எம்.கே. திவாரி 28 பந்தில் 33 ரன்னையும் எடுத்தனர். 

டெக்கான் அணி சார்பில், ஏ. மிஸ்ரா 22 ரன்னைக் கொடுத்து 1 விக்கெ ட் எடுத்தார். தவிர, ஸ்டெயின், கிறிஸ்டியன் மற்றும் ஓஜா ஆகியோரு க்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது. இஷாந்த், எஸ். தவான் இருவருக் கும் விக்கெட் கிடைக்கவில்லை. 

டெக்கான் அணி 170 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இல க்கை கொல்கத்தா அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னை எடுத்தது. 

இதனால் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் கொல்கத் தா நைட் ரைடர்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

டெக்கான் அணி தரப்பில், துவக்க வீரர் எஸ்.தவான் அதிகபட்சமாக 45 பந்தில் 54 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக் கம். தவிர, சோகல் 20 பந்தில் 26 ரன்னையும், ரவி டேஜா 22 பந்தில் 30 ரன்னையும் எடுத்தனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில், ஆர். பாட்டியா 26 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இக்பால் அப்துல்லா 34 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரட்லீ மற்றும் காலிஸ் இருவ ரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக யூசுப் பதான் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்