பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் மன்னிப்பு கோர வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. 9 - குஜராத் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் பற்றி விமர்சனம் செய்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷி லேகி மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகரில் 2004 ம் ஆண்டு மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் 4 பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டிருந்தனர் என்று போலீசார் கூறியிருந்தனர். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அண்மையில் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது குற்றப்பத்திரிகையில் என்கவுன்ட்டர் சம்பவம் போலியானது என்றும் போலீசார் திட்டமிட்டு அடைத்து வைத்து பின்னர் சுட்டுக் கொன்றனர் என்றும் கூறப்பட்டது.  இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய பா.ஜ.க. வின் செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷி லேகி, இஷ்ரத் ஜஹானை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும் மீனாக்ஷி லேகி மன்னிப்பு கோரவும் வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்துக்கு மனு அனுப்பி வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: