முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டி ஊழல் - கல்மாடி கோர்ட்டில் ஆஜர்

வியாழக்கிழமை, 5 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மே. 5 - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு வழக்கில் சுரேஷ் கல்மாடியை கோர்ட்டில் ஆஜர் படுத்த சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. கல்மாடியின் 8 நாள் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இது பற்றிய விபரம் வருமாறு - 

டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்த போது, ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக கல்மாடி செயல்பட்டார். விளையாட்டுப் போட்டிகளின் போது ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

கடந்த ஏப்ரல் மாதம் 25 -ம் தேதி அன்று கல்மாடியை சி.பி.ஐ. கைது செய்தது. காமன்வெல்த் போட்டியின் போது, விளையாட்டு நேரம் மற்றும் அணிகளின் வெற்றிப் புள்ளி இவற்றை அறிவிக்க கருவிகள் விலைக்கு வாங்கப்பட்டன. 

இந்த கருவியை விளையாட்டு அரங்கத்தின் வெவ்வேறு இடங்களில் வைத்தனர். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து இந்த கருவிகளை விலைக்கு வாங்கினர். 

காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி மற்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் முறைகேட்டில் ஈடு பட்டார் என்று கூறப்படுகிறது. 

அதாவது சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர் ரூ. 95 கோடி அதிகமாக கொடுத்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. எனவே கல்மாடியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 

கல்மாடி கடந்த 8 நாட்களாக சி.பி.ஐ. காவலில் இருந்தார். 8 நாள் கா வல் நேற்று முடிவடைந்தது. எனவே சி.பி.ஐ. கோர்ட்டில் கல்மாடி யை ஆஜர்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்