முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். கூட்டணியில் இருந்து லல்லு பிரசாத் கட்சிக்கு கல்தா

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 10 - லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கடந்த 2004 ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வருகிறது. வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க லல்லு நினைத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி பீகாரில் கூட்டணியை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் உறவு வைத்துக் கொள்ள காங்கிரஸ் துடிக்கிறது. இதை கருத்தில் கொண்டே பீகார் மாநில அரசுக்கு சலுகை மேல் சலுகையாக வாரி வழங்கி வருகிறது. பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் காங்கிரசுடன் இணையும் என்று தெரிகிறது. இதனிடையே நிதிஷீன் எதிரியான லல்லு பிரசாத் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். 

இதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனின் கட்சியை காங்கிரசுடன் சேர்ந்து லல்லுவும் ஆதரித்தார். ஜார்கண்டில் சிபுசோரனுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலுக்காக அவருடன் இப்போதே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தொகுதி ஒதுக்கீடுகளும் முடிந்து விட்டன. அவர்களுடன் சேர்ந்து உடன்பாடு செய்ய லல்லு முயன்றார். ஆனால் இதற்கு காங்கிரஸ் செவிசாய்க்கவில்லை. இதன் மூலம் லல்லு பிரசாத்துக்கு கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கல்தா கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்