முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்மாடியிடம் விரைவில் அமலாக்கப்பிரிவு விசாரணை

வியாழக்கிழமை, 5 மே 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, மே.5 - அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக கல்மாடியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது உள்ளிட்ட பல வகைகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பது குறித்து புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக காமன்வெல்த் அமைப்புக்குழுவில் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கல்மாடியை சி.பி.ஐ. கைது செய்தது. கடந்த 25ம் தேதி கைதுசெய்யப்பட்ட அவர் சி.பி.ஐ. காவலில் உள்ளார். அவரது 8 நாள் காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். கல்மாடி மீது மோசடி ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மேலும் டைமர் கருவிகள் வாங்கியதில் ரூ.90 கோடி ஊழல் நடந்ததாக  அவர் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது. காமன்வெல்த் ஜோதி தொடக்க ஓட்டம் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் கல்மாடி மீது பணபரிமாற்ற மோசடி மற்றும் அன்னிய செலாவணி மோசடி போன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அவரிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டின் அனுமதி பெற அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கோர்ட்டு அனுமதியுடன் கல்மாடியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்