முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15-ம் தேதி டெல்லியில் காவிரி மேற்பார்வை குழு கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 10 - காவிரி மேற்பார்வை குழுவின் மூன்றாவது கூட்டம் வரும் 15 ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய நீர்வள துறை செயலர் அலுவலகம் உள்ள ஷராம் சக்தி பவனில் கூட்டம் நடைபெறும். அதில் பங்கேற்கும்படி குழுவின் உறுப்பினர்களான தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநில அரசுகளின் தலைமை செயலர்கள், மத்திய நீர் ஆணையத் தலைவர், குழுவின் உறுப்பினர் , செயலரான மத்திய நீர் ஆணைய தலைமை பொறியாளர் ஆகியோருக்கு குழுவின் தலைவரும் மத்திய நீர்வள துறை செயலருமான அலோக் ராவத் கடிதம் அனுப்பினார். மத்திய நீர்வள துறை செயலராக இம்மாதம் 1 ம் தேதி அலோக்ராவத் பொறுப்பேற்றார். காவிர் மேற்பார்வை குழு கூட்டத்தை அவர் கூட்டுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் அதன் நான்கு அணைகளான கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் ஆகியவற்றில் நீர் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் ஆதாரங்களை தமிழக அரசு திரட்டியுள்ளது. ஆனால் தங்கள் மாநிலத்தில் போதிய நீர் இல்லை என்று கர்நாடகம் கூறி வருகிறது. அதை மேற்பார்வை குழு கூட்டத்தில் விளக்கி காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடந்த மாதத்தில் திறக்க வேண்டிய 10 டி.எம்.சி. நீரையும், இந்த மாதத்தில் திறக்க வேண்டிய நிலையும் தமிழக தலைமை செயலர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காவிரி மேற்பார்வை குழுவின் முதலாவது கூட்டம் கடந்த மாதம் 1 ம் தேதி நடைபெற்றது. அதில் குழுவின் செயல்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்க கர்நாடகம் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஜூன் 9 ம் தேதி கர்நாடகம் தாக்கல் செய்த மனுவில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்த மேற்பார்வை குழு முன்வைக்கும் வழிகாட்டுதல்கள் திட்டங்கள் ஏற்புடையதாக இல்லை என்று ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. 

மேற்பார்வை குழுவின் இரண்டாவது கூட்டம் கடந்த ஜூன் மாதம் 12 ம் தேதி நடைபெற்ற போது காவிரி மேற்பார்வை குழுவை காவிரி மேலாண்மை வாரியமாக கருத முடியாது என்று கர்நாடகம் வாதிட்டது. அதையடுத்து இரு முறை கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனே அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கடந்த வாரம் முறையிட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இரு அமைப்புகளையும் உருவாக்குவது குறித்து மூன்று வாரங்களுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்