முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தி புத்தகயா பயணம்

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 11  - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி ஷிண்டே ஆகியோர் புத்தகயா சென்று குண்டுவெடித்த இடத்தை பார்வையிட்டனர். பீகார் மாநிலம் புத்தகயாவில் 9 குண்டுகள் வெடித்தன. இதில் 4 பேர் காயமடைந்தனர். புத்த மதம் இந்தியாவில் அவ்வளவாக பரவவில்லை. சீனா, ஜப்பான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் பரவியுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறார்கள். கோவாவுக்கு அடுத்து புத்தகயாதான் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. இதனால் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்பு புத்த மதத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இதையடுத்து குண்டு வெடிப்பு வழக்கையும், பாதுகாப்பு பொறுப்பையும், தேசிய பாதுகாப்பு படை ஏற்றுள்ளது. பா.ஜ.க. தலைவர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் புத்தர் கோயில் சென்று குண்டு வெடிப்பு இடங்களை பார்வையிட்டு வந்தனர். பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து அவர்கள் மத்திய, மாநில அரசுகளை குற்றம் சாட்டினர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புத்தகயா சென்று பார்வையிட்டார். அங்கு அவர் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்