முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஐ.டி.க்களில் 769 சீட்கள் காலி

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

மும்பை, ஜூலை. 11 - ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி மையங்களில் சீட் கிடைத்தும் 769 பேர் சேரவில்லை என்றால் நம்ப முடிகிறதா?. ஐ.ஐ.டி. யில் படிக்க வேண்டும் என்பதே லட்சக்கணக்கான மாணவர்களின் கனவாக இருந்து வரும் நிலையில், இதில் இந்த ஆண்டு இடம் கிடைத்தும் கூட நூற்றுக்கணக்கானவர்கள் சேர மறுத்துள்ளனர். இதனால் செகண்ட் ரவுண்ட் சேர்க்கையை ஆரம்பித்துள்ள ஐ.ஐ.டி. க்கள். வழக்கமாக இடஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் தான் காலியாக இருக்கும். தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று ஏதாவது காரணம் கூறி, ாஉள்குத்துா வேலை பார்த்து, பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்களுக்கான இடங்களை நிரப்பாமல் விட்டுவிடுவர். ஆனால், இந்த முறை காலியாக இருப்பது பொதுப் பட்டியலில் உள்ள ஜெனரல் கேட்டகிரி இடங்கள் என்பது தான் முக்கியமான விஷயம். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஐ.ஐ.டி.க்களில் நம்பிக்கையில்லை, நல்ல கோர்ஸ் கிடைக்கவில்லை என்று இதற்கு பல காரணங்களை மாணவர்கள் கூறியுள்ளனர். சீட் தர மறுக்கும் ஐஐடிக்களில் முதலிடத்தில் இருப்பது ஐ.ஐ.டி.-மெட்ராஸ் தான். அடுத்த இடத்தில் இருப்பது ஐ.ஐ.டி.-காரக்பூர். இவ்வாறு இடம் மறுக்கப்பட்ட மாணவர்கள் கோர்ட்டுக்குப் போக தயாராகிக் கொண்டுள்ளனர் என்பது தனிக்கதை. ஐ.ஐ.டி.-சென்னை மாஜி இயக்குனர் இந்திரேசன், ஐ.ஐ.டி. டெல்லி மாஜி இயக்குனர் நிகம் ஆகியோர் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில், தலித் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 50 சதவீதம் காலியாகவே இருந்துவிடுவதாகவும், இவர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற தவறுவதால் இடங்கள் நிரம்புவதில்லை என்றும், அதில் படிப்பில் சேர்ந்த 25 தலித் மாணவர்கள் சரியாக படிக்காததால் பாதியிலேயே படிப்பிலிருந்து வெளியேற்றுவதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்