எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் வலை

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

பெங்களூர், ஜூலை. 11 - பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் காக்னிசன்ட், கேப்ஜெமினி, விப்ரோ உள்ளிட்ட சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி பொருளாதார கல்வி நிறுவனங்களில் இருந்து எம்.பி.ஏ. பட்டதாரிகளை வேலைக்குச் சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. நாட்டில் உள்ள 21 முன்னணி பொருளாதாரக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை கேம்பசிலேயே அள்ளிக் கொண்டு வருவதில் காக்னிசன்ட் நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது. 25 சாப்ட்வேர் என்ஜினியர்களை பணியில் சேர்த்தால் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரியை பணியில் சேர்க்கிறது காங்னிசன்ட். 2013 ம் ஆண்டில் தேறி வரப் போகும் 200 எம்.பி.ஏ. பட்டதாரிகளை கேம்பசிலேயே வைத்து பணியில் சேர்த்துள்ளது காக்னிசன்ட். இதில் இரண்டாவது இடத்தில் இருப்பது கேப்ஜெமினி. அதே போல விப்ரோவும் எம்.பி.ஏ. பட்டதாரிகளை குறி வைத்து வருகிறது. இவர்களை தொழில் ஆலோசனை, வாடிக்கையாளர் உறவு நிர்வாகம், தொழில் வளர்ச்சி, புதிய தொழில் வாய்ப்புகள் குறித்த மதிப்பீடு, வணிக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பணிக்கு அமர்த்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள். கோல்ட்மென் சாக்ஸ் போன்ற நிறுவனங்கள் பேஸ்புக், லிங்ட்இன் போன்ற சமூக வளைத்தளங்கள் மூலம் முன்னணி பொருளாதார கல்வி நிறுவனங்களில் பயிலும் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வலை வீசி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: