முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்.பி.ஜி. விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்ய திட்டம்

புதன்கிழமை, 10 ஜூலை 2013      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை. 11 - ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக, ஊக்கத்தொகை சுமையைக் குறைக்கும் பொருட்டு, தற்போது டீசல் மற்றும் சமையல் எரிபொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்படும் முறையை, அரசு மாற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல், கெரோசின் மற்றும் எல்பிஜி போன்றவற்றை ஏற்றுமதி செய்தால் ரீபைனரீக்களுக்கு என்ன விலை வழங்கப்படுமோ அதற்கு ்டான விலை வழங்கப்பட வேண்டும் என்று கடந்த நிதியாண்டில் இருந்து, நிதி அமைச்சகம் வலியுறுத்தி வந்துள்ளது. இறக்குமதி சமநிலை விலை (இறக்குமதி விலையோடு வரிகள் மற்றும் போக்குவரத்தையும் சேர்த்து) இயக்குமுறையில் சிறிது மாற்றம் செய்யபட்டிருக்குமாயின், அது சுமார் 1,61,029 கோடி ரூபாய் வரையிலான, கடந்த நிதியாண்டின் ஊக்கத்தொகையில் இருந்து சுமார் 17,618 கோடி ரூபாயை குறைத்திருக்கக்கூடும். ஆனால் எண்ணை வளத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி, பிரதமரின் தலையீட்டைக் கோரியும், விலை நிர்ணயப் பிரச்சனையை கைதேர்ந்த நிபுணர் குழு பார்வையிட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தும், நடவடிக்கையைத் தடுத்துவிட்டார். திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினரான கிரித் எஸ் பரிக் அவர்களின் கீழ் ஒரு குழு நியமிக்கப்பட்டு, பொருத்தமானதொரு விலை நிர்ணய இயக்கமுறையை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் நிதியமைச்சர், ஏற்றுமதி சமநிலை விலையின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டதான ஒரு மாதிரியை பரிந்துரைக்குமாறு உத்தரவிட்டு இக்குழுவின் ஆய்வில் மாற்றம் வேண்டியிருக்கிறார். நிதியமைச்சர், ஆய்வு முறையில் ஒரு மாற்றத்தை வேண்டினார். அதற்கு நாங்களும் இசைந்தோம் என்று மொய்லி கூறியுள்ளார். உண்மையில், எண்ணை வளத்துறை அமைச்சகம் பரிக் கமிட்டியை டீசல், பி.டி.எஸ். கெரோசின் மற்றும் மானிய விலை வீட்டு உபயோக எல்.பி.ஜி. ஆகியவற்றுக்கு, இறக்குமதி சமநிலைடிவர்த்தக சமநிலையின் அடிப்படையிலான தற்போதைய விலை நிர்ணய முறையை மறு ஆய்வு செய்து, இப்பொருட்களின் விற்பனைக்கு பொருத்தமானதொரு விலை நிர்ணய முறையை பரிந்துரைக்க வேண்டும்.ா என்று கேட்டுக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்திருக்கிறது. சிதம்பரத்தின் தலையீட்டுக்குப் பின், இக்கமிட்டி பெட்ரோலியப் பொருட்களுக்கான தற்போதைய விலை நிர்ணய முறையை மறு ஆய்வு செய்து, இந்தியாவிலிருந்து தனியார் ரிபைனர்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய பெட்ரோலியப் பொருட்களின் அசல் ஏற்றுமதி விலையோடு தொடர்புடையதான ஏற்றுமதி சமநிலை விலையை மதிப்பீடாகக் கொண்டதொரு புதிய விலை நிர்ணய முறையை பரிந்துரைக்க வேண்டும்ா என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மொய்லி தெரிவித்துள்ளார். 

இந்த மாற்றம் பரிக் குழுவினர், ஏற்றுமதி சமநிலை விலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு டீசல், கெரோசின் மற்றும் எல்.பி.ஜி. ஆகியவற்றின் விலைகளை நிர்ணயம் செய்யலாம் என்று பரிந்துரைக்க வேண்டும் என்பதையே முக்கியமாக வலியுறித்தியுள்ளது. மேலும், இக்குழுவின் தகவலறிக்கை நிராகரிக்கப்படாத வரையில், இதுவே ஊக்கத்தொகை கணக்கீடுகளுக்கு மதிப்பீட்டு அளவையாக இருக்கும். தற்சமயம், டீசலின் விலை வர்த்தக சமநிலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் இறக்குமதி விலையாகவும், 20 சதவீதம் ஏற்றுமதி விலையாகவும் இருக்கின்றன. கெரோசின் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் விலைகள் இறக்குமதி சமநிலை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. நிதி அமைச்சகம் 2012-2013 ஆம் ஆண்டில் டீசல் மற்றும் கெரோசின் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி விலையின் அடிப்படையிலான விலை நிர்ணயமும், எல்பிஜிக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விலைகளின் 60-40 அடிப்படையிலான விலை நிர்ணயமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஏற்றுமதி சமநிலையிலான விலை நிர்ணயத்துக்கு மாறுவதன் மூலம், டீசலுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையில் சுமார் 14,372 கோடி ரூபாய் முதல் 77,689 கோடி ரூபாய் வரையில் 2012-13 ம் ஆண்டில் மிச்சப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எல்.பி.ஜி.யில் சுமார் 2,245 கோடி ரூபாயையும், கெரோசினில் சுமார் 1,001 கோடியையும் மிச்சப்படுத்தலாம். இந்த மிச்சப்படுத்துதல், ஏற்றுமதி வரிகள் மற்றும் இறக்குமதி சமநிலை விலையின் நோஷனல் போக்குவரத்து செலவீனம் ஆகியவற்றைக் களைவதன் மூலம் சாத்தியமாகிறது. நடப்பு நிதியாண்டில், டீசல், கெரோசின் மற்றும் எல்.பி.ஜி. ஆகியவற்றை மானிய விலையில் விற்பதற்கான மொத்த ஊக்கத்தொகை ஏப்ரல் மாதத்தில் சுமார் 80,000 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது; ஆனால் தற்போது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இறக்குமதி விலைகளை அதிகரித்துள்ளதனால் இந்த ஊக்கத்தொகை சுமார் 1,25,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago