ஆப்கனில் மனிதகுண்டு தாக்குதலில் 28 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      உலகம்
Afghan

 

காபூல்,பிப்.23 - வடக்கு ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகம் ஒன்றில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். குந்தூஸ் மாகாணத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் காவல் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பொது மக்களுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். அடையாள அட்டையை பெற அலுவலகத்திற்கு வெளியே மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. 

அப்போது வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் திடீரென குண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் அந்த பயங்கரவாதியும் அங்கு குழுமியிருந்த மக்களில் 29 பேரும் பலியானார்கள். மேலும் இந்த தாக்குதலால் அந்த கட்டிடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த மாத தொடக்கத்தில் இதே பகுதியில் தீவிரவாதி ஒருவன் மாவட்ட கலெக்டரை தற்கொலை தாக்குதல் நடத்தி கொன்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: