முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் 2வது பசுமை புரட்சி பீகாரில் ஏற்படும்: அப்துல் கலாம்

வியாழக்கிழமை, 5 மே 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா,மே.5 - நாட்டில் 2 வது பசுமை புரட்சி பீகார் மாநிலம் பலிகஞ்சில் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.  பீகார் மாநிலம் பலிகஞ்ச்சில் விவசாயிகள் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறுகையில்,  பலிகஞ்ச் விவசாயிகள் 2 வது பசுமை புரட்சியை படைக்கும் திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களது முயற்சியால் விவசாய உற்பத்தி இரண்டு மடங்காக ஆகியுள்ளது. பலிகஞ்ச் விவசாயிகளின் இந்த முயற்சி தொடர வேண்டும். இதன் மூலம் பீகாரை நாட்டின் பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும். இம்மாநிலத்தில் உணவு உற்பத்தியயை இரண்டு மடங்கு ஆக்க பலிகஞ்ச் மற்றும் இதர மாவட்ட விவசாயிகளுடன் இங்குள்ள ராஜேந்திரா விவசாய பல்கலைக்கழகம் மற்றும் உள்ள பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். புதிய புதிய கண்டுபிடிப்புகளை விவசாயத்தில் புகுத்த வேண்டும். இதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே உணவு உற்பத்தியில் நமது இலக்கை அடைய முடியும். இதன் மூலம் 2020 ம் ஆண்டில் உணவு உற்பத்தியை 28 கோடி டன்னில் இருந்து 34 கோடி டன்னாக உயர்த்த முடியும். 

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம், வீரிய விதைகள் ஆகியவற்றை அடங்கிய அறிவுசார்ந்த விவசாயமாக 2 வது பசுமை புரட்சி அமைய வேண்டும். விவசாய தொழில் நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்