ஏர் இந்திய விமானிகள் 8-வது நாளாக ஸ்டிரைக்

வியாழக்கிழமை, 5 மே 2011      இந்தியா
Air india strike 0

 

மும்பை,மே.5 - ஏர் இந்திய விமான கம்பெனியை சேர்ந்த விமானிகள் நேற்று 8-வது நாளாக ஸ்டிரைக் செய்தனர். இதனால் 90 சதவீத விமானங்கள் செல்லவில்லை. பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஸ்டிரைக்கால் ஒரு நாளைக்கு ரூ. 26 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

செலவை குறைப்பதற்காக இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கம்பெனியுடன் ஏர் இந்தியா விமான கம்பெனி இணைக்கப்பட்டது. ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கம்பெனியில் பணிபுரியும் விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு சமமான சம்பளம் ஏர் இந்தியா கம்பெனிகளுக்கு கொடுக்கப்படவில்லை. அதனால் சமமான ஊதியம் கோரி ஏர் இந்திய விமான கம்பெனி ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு சுப்ரீம்கோர்ட்டு மற்றும் டெல்லி ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்ததோடு உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதேசமயத்தில் பிடிவாத போக்கை கைவிடும்படி ஏர் இந்தியா விமான கம்பெனி நிர்வாகத்தையும் டெல்லி ஐகோர்ட்டும் சுப்ரீம்கோர்ட்டும் கேட்டுக்கொண்டது. கோர்ட்டு கண்டனம் தெரிவித்தும் ஏர் இந்திய கம்பெனி விமானிகள் நேற்று 8-வது நாளாக ஸ்டிரைக் செய்தனர். டெல்லி மற்றும் மும்பையில் இயங்கிய தலா 10 விமானங்களை சேர்த்து வெறும் 10 சதவீத விமானங்கள்தான் செயல்பட்டன. இதர விமானங்கள் செயல்படவில்லை.  விமான சர்வீஸ் அடியோடு பாதித்தது. ஏர் இந்திய விமான கம்பெனியை சேர்ந்த 320 கம்பெனிகளில் மொத்தம் 40 விமானங்கள்தான் இயங்கின. தினமும் ஸ்டிரைக் நாட்களில் ஏர் இந்திய கம்பெனிக்கு ரூ.26 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் 7 விமானிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: