மீத்தேன் வாயு எடுக்கும் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க திட்டமிட்டுள்ள நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார். காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சுழைல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனும் தன்னை சந்திக்க வந்த விவசாயிகளிடம், விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்துக்கும் அனுமதி வழங்க மாட்டோம் என்று உறுதி அளித்தார். நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க திட்டமிட்டுள்ள நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் 15 நாட்களுக்குள் பதில் தரவேண்டும். பதில் தரவில்லை என்றால் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்க தயங்க மாட்டோம்.

சேது சமுத்திர திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று சிலர் கூறி வருகிறார்கள். இந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டம். முறையாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி வாங்கி தான் அந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: