விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்: சித்தராமையா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஜூலை.13 - கர்நாடக மாநிலத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று சட்ட சபையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். 2013-2014-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பித்து அவர் மேலும் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான கடன் உச்சவரம்பு ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி விகிதம் ரூ.2 லட்சத்திலிருந்து, ரூ.3 லட்சம் வரை 1 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். இதற்கு முன்பு குறுகியகால கடனுக்கு வட்டி கிடையாது. ரூ.1 லட்சத்திலிருந்து, ரூ.3 லட்சம் வரை 1 சதவீத வட்டி வசூலிக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோருக்கான கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். நிரந்தரமான பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் மூலம் சாதி வாரியாகவும், சமூகம் மற்றும் கல்வி அடிப்படையில் சர்வே எடுக்கப்படும் என்றார்.  

டீசலுக்கான விற்பனை விலை 16.75 ரூபாயிலிருந்து, 15.65 ரூபாயாக குறைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். 17 வகைகளில் கூடுதல் சுங்க வரி  16 சதவீதத்திலிருந்து, 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றார்.

கர்நாடக சட்ட சபையில் அவர் 7 பட்ஜெட்களை சமர்ப்பித்துள்ளார்.  

தற்போது முதலமைச்சாரக இருந்தாலும், நிதி இலாகாவை அவர் தன் வசம் வைத்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: