முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் முறைகேடு - மொரீசியஸில் சி.பி.ஐ. விசாரணை நடத்த திட்டம்

வியாழக்கிழமை, 5 மே 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, மே.5 -  2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மொரீசியஸ் தீவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த முறைகேடு பணம் கோடிக்கணக்கில் மொரீசியஸ் உள்ளிட்ட பல வெளிநாஉகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டிருப்பது பற்றி மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்துகிறது. இந்த முறைகேடு தொடர்பான தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மொரீசியஸ் செல்கிறார்கள். ஷாகித் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மொரீசியஸ் தீவில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரையொட்டி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. வருகிற 15ம் தேதி இந்த அதிகாரிகள் குழு மொரீசியஸ் செல்கிறது. அங்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டிருப்பது பற்றி தகவல்கள் சேகரித்து விசாரிக்கிறார்கள். அரசியல் தரகர் ராடியாவின் டெலிபோன் உரையாடலில் கிடைத்த தகவலின் பேரில் சி.பி.ஐ. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் பணபரிமாற்றம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தயுள்ளது. மேலும் மொரீசியஸ் தீவுக்கு சென்று விசாரணை நடத்த இருப்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையின் மூலம் சட்டவிரோத பண முதலீடு விபரங்கள் வெளியே தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்