சமையல் கேஸ் விலை உயராது: வீரப்ப மொய்லி உத்தரவாதம்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 13 - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த இழப்பை சரிக்கட்ட சமையல் கேஸ், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 

அது போல சமையல் கேஸ் விலையை ரூ. 30 முதல் ரூ. 50 வரை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பாக முடிவு அறிவிக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் சமையல் கேஸ், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு தயங்குகிறது. தற்போது பொருளாதார மந்தநிலை நீடிக்கும் நேரத்தில் சமையல் கேஸ், டீசல் விலையை உயர்த்தினால் அது அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க செய்து விடும் என்று எச்சரிக்கப்பட்டது. 

இதையடுத்து சமையல் கேஸ் விலையை உயர்த்த வேண்டாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. இதை மத்திய பெட்ரோலிய மந்திரி வீரப்ப மொய்லி அதிகாரபூர்வமாக தெரிவித்தார். டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், சமையல் கேஸ் விலையை உயர்த்த மத்திய மந்திரி சபையில் நாங்கள் ஆலோசிக்கவில்லை. அதற்கான திட்டமும் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: