மேற்கு வங்கத்தில் யானை தாக்கியதில் தேர்தல் அதிகாரி சாவு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூலை.13  - மேற்கு வங்காள மாநிலத்தில் யானை தாக்கியதில் தேர்தல் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். பங்குரா மாவட்டத்தில், போர்ஜோரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேற்கு வங்காள மாநிலத்தில் ஊராட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜல்பைகுரி மாவட்டத்தில், பானுநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரன் சேத்ரி. இவர் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார். போர்ஜோரா பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் பணியாற்றிவிட்டு இரவு 2 மணிக்கு வீடு திரும்பிய இவரை யானை விரட்டியது.

யானைக்கு ஈடுகொடுத்து அவரால் ஓடமுடியவில்லை. பின்னர் யானை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் கிரன் சேத்ரி உயிரிழந்தார். இதையடுத்து இவரது சடலம் பங்குரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: