முத்தரப்பு போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூலை. 13- முத்தரப்பு ஒரு நாள் தொடர் இறுதிச் சுற்றில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தி ய அணி1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இந்தப் போட்டியில் மீண்டும் களம் இறங்கிய கேப்டன் தோனி கடைசி கட்ட த்தில் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 

இறுதிக் கட்டத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகள் சிறிது இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. ஒரு புறம் கேப்டன் தோனி நிலைத்து ஆடினார். 1 விக்கெட் கைவசம் இருக்கையில் அவர் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில், ரோகித் சர்மா மற்றும் கேப்டன் தோனி இருவரும் அபாரமாக ஆடி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக, ரெய் னா, திணேஷ் கார்த்திக் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, ஜடேஜா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வ ர் குமார், அஸ்வின் , வினய்குமார் மற் றும் ரெய்னாஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியின் ரன் ரேட்டைக் கட்டுப்படுத் தியது. 

செல்கான் மொபைல் கோப்பைக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டி மே.இ. தீவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் இரவு நடந்தது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கோப்பை க்காக களம் இறங்கின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய து. இறுதியில் அந்த அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்னை எடுத்தது. 

இலங்கை அணி தரப்பில் கீப்பர் சங்கக் கரா அதிகபட்சமாக, 100 பந்தில் 71 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். திரிமன்னே 72 பந்தில் 46 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, ஜெயவர்த்தனே 22 ரன் னையும், தரங்கா 11 ரன்னையும், கேப் டன் மேத்யூஸ் 10 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில் ஆல்ரவுண்டர் ஜடேஜா 23 ரன்னைக் கொடுத்து 4 விக் கெட் எடுத்தார். தவிர, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வி ன் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்த னர். 

இந்திய அணி 202 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இலங் கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த  அணி 49.4 ஓவரில் 9 விக் கெட் இழப்பிற்கு 203 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த இறுதிச் சுற்றில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற் றி பெற்று கோப்பையை தனது வசமா க்கியது. 

இந்திய அணி தரப்பில், ரோகித் சர்மா அதிகபட்சமாக, 89 பந்தில் 58 ரன் எடுத் தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ச ர் அடக்கம். 

இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் தோனி 52 பந்தில் 45 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்று ம் 2 சிக்சர் அடக்கம். 

தவிர, ரெய்னா 27 பந்தில் 32 ரன்னையு ம், திணேஷ் கார்த்திக் 37 பந்தில் 23 ரன் னையும், ஷிகார் தவான் 16 ரன்னையும் எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், ஹெராத் 20 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத் தார். தவிர, எரங்கா 2 விக்கெட்டும், லக்மல், மேத்யூஸ் மற்றும் மலிங்கா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தோனியும், தொடர் நாயகனாக புவ னேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: