ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸ்.,க்கு 311 ரன் இலக்கு

சனிக்கிழமை, 13 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

டிரன்ட் பிரிட்ஜ், ஜூலை.14 - ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 311 ரன்னை இலக்காக இங்கிலாந்து அணி வைத்துள்ளது. ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டி இங் கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் நாட்டிங்ஹாமில் உள்ள டிரன்ட் பிரிட்ஜில் கடந்த 10 -ம் தேதி துவங்கியது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 59 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில் டிராட் 88 பந்தில் 48 ரன்னையும், பேர்ஸ்டோ 37 ரன்னையும், ஜோ ரூட் 30 ரன்னையும், பெல் 25 ரன்னையும், பிராட் 24 ரன்னையும், பீட்டர்சன் 14 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி 64.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 280 ரன்னை எடுத்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஆஸ்டின் அகர் 101 பந்தில் 98 ரன்னையும், பில் ஹியூக்ஸ் 81 ரன்னையும், எஸ்.பி.டி. ஸ்மித் 53 ரன்னையும், ரோஜர்ஸ் 16 ரன் னையும், வாட்சன் 15 ரன்னையும் எடுத் தனர். 

பின்பு 2- வது இன்னிங்சை ஆடிய இங் கிலாந்து அணி நன்கு பேட்டிங் செய்து 149.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை யும் இழந்து 375 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில், இயான் பெல் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்ப ம்சமாகும். அவர் 267 பந்தில் 109 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரி அடக் கம். 

தவிர, பீட்டர்சன் 150 பந்தில் 64 ரன்னையும், கேப்டன் கூக் 165 பந்தில் 450 ரன் னையும், பிராட் 148 பந்தில் 65 ரன்னையும், கீப்பர் பிரையர் 31 ரன்னையும் எடு த்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான ஸ்டார்க் 81 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். சிட்டில் 85 ரனனைக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பட்டின்சன் மற்றும் அகர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சி ல் 311 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணி வைத்தது. 

அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 4 -வது நாளன்று 16.3 ஓவரில் விக் கெட் இழப்பின்றி 59 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது வாட்சன் 31 ரன் னுடனும், ரோஜர்ஸ் 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தற்போது நிதானமாக ஆடி வரு கிறது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: